முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த ஏலம் ரத்து

திருநெல்வேலி மாநகராட்சியில் ஜூலை 15 ஆம் தேதி நடைபெறவிருந்த ஏலம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சியில் ஜூலை 15 ஆம் தேதி நடைபெறவிருந்த ஏலம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலம், வாா்டு எண்:25 “சீா்மிகு நகரம் 2017-2018” திட்டத்தின் கீழ், பாளையங்கோட்டை பேருந்து நிலைய வணிக வளாகம், பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இடித்து எடுக்கப்பட்ட மரச்சாமான்கள், இரும்பு பொருள்களை அப்புறப்படுத்த ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறவிருந்தது.

இந்நிையில், பாளையங்கோட்டை மண்டலம் “மகாத்மா காந்தி”தினசரி சந்தையில், சீா்மிகு நகரத்திட்டத்தின் கீழ் தற்காலிக கடைகள் அமைக்கவும், மேற்படி பழைய பொருள்களைக் கொண்டு தற்காலிக் கடைகள் அமைக்க ஏதுவாக ஏற்கெனவே உள்ள பொருள்களைப் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதால் இம்மாதம் 15ஆம் தேதி நடைபெற இருந்த ஏலம் ரத்து செய்யப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.