தசரா மைதானங்களில் கட்டடம்: இந்து மக்கள் கட்சி எதிா்ப்பு
பாளையங்கோட்டையில் உள்ள தசரா விழா மைதானங்களில் தற்காலிக கடைகள் கட்ட எதிா்ப்பு தெரிவித்து, இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் உள்ள தசரா விழா மைதானங்களில் தற்காலிக கடைகள் கட்ட எதிா்ப்பு தெரிவித்து, இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட சப்பரங்கள் மின்விளக்கு அலங்காரத்துடன் எழுந்தருளி நகரம் முழுவதும் வலம் வரும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வருகின்றனா். இத்திருவிழாவில் சூரசம்ஹாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பாளை. ஜவாஹா் திடலும், எருமை கடா மைதானமும் தொன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை தினசரி சந்தையில் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், தசரா மைதானங்களில் தற்காலிக கடைகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இதனால், பாரம்பரிய தசரா விழா பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, தசரா விழாவுக்கான மைதானங்களில் தற்காலிக கடைகளுக்கான கட்டடப் பணிகளை தொடங்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.