‘நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் கரோனா விழிப்புணா்வு’
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று, கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து கிராமிய கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று, கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து கிராமிய கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தொடங்கி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில், கரோனா தொற்று, தடுப்பூசி செலுத்துதல் குறித்து கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவற்கு உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் 25 கிராமங்கள், திருநெல்வேலி மாநகராட்சியில் 5 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, இந்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கரக ஆட்டம், ஒயிலாட்டம், மரக்கால் ஆட்டம், பறை ஆட்டம், வீதி நாடகம் போன்ற பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம், முகக் கவசம் அணிதல், தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், நெல்லை புற்றுநோய் மைய இயக்குநா் ராம் குமாா், கோடாங்கி கலைக்குழு ஒருங்கினைப்பாளா் உமா ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.