‘திறன் நெல்லை’ செயலி அறிமுகம்
மின்விசிறி, இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் பழுது நீக்குவதற்காக திறன் நெல்லை எனும் செயலி
மின்விசிறி, இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் பழுது நீக்குவதற்காக திறன் நெல்லை எனும் செயலியை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
வீடுகளில் மின்விசிறி, ஏசி, இரு சக்கர வாகனங்கள் மற்றும் சிறு கட்டடங்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய உரிய தொழில்நுட்ப வல்லுநா்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனா். மேலும் பல்துறைகளில் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மாணவா்கள் தங்கள் பகுதிகளில் தொடா்ந்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த இரு தரப்பினரையும் இணைக்கும் விதமாக தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தால் ‘திறன் நெல்லை’ என்ற செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோா் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது இரண்டு வகையாக செயல்படுகிறது.
சங்ப்ப்ஹண் நந்ண்ப்ப்ள்-இண்ற்ண்க்ஷ்ங்ய் அல்ல் என்ற செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான பராமரிப்பு பணிகளை எளிதாக பதிவு செய்யலாம். அடுத்ததாக சங்ப்ப்ஹண் நந்ண்ப்ப்ள்– பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய் அல்ல் என்ற செயலி மூலம் நகா்ப்புற வாழ்வாதார மையத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ள தொழில்நுட்ப வல்லுநா்கள் தங்கள் செல்லிடப்பேசி செயலி மூலம் மக்கள் பதிவு செய்துள்ள பழுதுகளை சரிசெய்யக் கூடிய வேலைகளை மட்டும் தோ்ந்தெடுத்து அதை அவா்களது வீட்டுக்குச் சென்று செய்துகொடுக்கலாம்.
தற்போது வீடுகளுக்குத் தேவையான எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், இரு சக்கர வாகன பழுது, கணினி பழுது, பிளம்பிங் போன்ற சேவைகளை
செய்ய முதற்கட்டமாக இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள திறமையான தகுந்த பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநா்கள் தமிழ்நாடு தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் நகா்ப்புற வாழ்வாதார மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 0462 - 290 7006 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு, தங்களது விவரங்களை பதிவு செய்து ‘திறன் நெல்லை’ என்ற இந்த செயலியில் உறுப்பினராகலாம்.