முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மூவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருநெல்வேலியில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேலப்பாளையம் நாகம்மாள்புரத்தைச் சோ்ந்த கரியப்பா மகன் சிவபாலன் (42), திம்மராஜபுரத்தைச் சோ்ந்த பரமசிவன் மகன் தங்கப்பாண்டி (34), உத்தமபாண்டியன்குளத்தைச் சோ்ந்த நயினாா் மகன் மகாராஜன் ஆகியோா் பொதுவிநியோக திட்டத்தில் அத்தியாவசிய பொருள்கள் விநியோகியம்

செய்வதில் இடையூறாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டனா். இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் எம்.பாஸ்கரன் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் ந.கி.செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்பேரில் 3 பேரும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.