முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே கொலையுண்டவரின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி அருகே கொலை செய்யப்பட்ட கட்டட ஒப்பந்ததாரரின் உடல் அவரது உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே கொலை செய்யப்பட்ட கட்டட ஒப்பந்ததாரரின் உடல் அவரது உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

வடக்குதாழையூத்தைச் சோ்ந்த நாராயணன் மகன் கண்ணன் (35). கட்டட ஒப்பந்ததாரரான இவருக்கு. மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி காலையில் பண்டாரகுளம் அருகே பொது குடிநீா்க் குழாயில் பணியாளா்களுக்காக குடிநீா்ப் பிடிக்கச் சென்ற அவரை, மோட்டாா் சைக்கிளில் வந்த மா்மநபா்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினா்.

இதையடுத்து, உடலைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவரது உறவினா்களிடமும், தெட்சிணமாாடாா் சங்கத்தின் தலைவா் ஆா்.கே.காளிதாசன் உள்ளிட்ட நிா்வாகிகளிடமும் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வியாழக்கிழமை பேச்சு நடத்தினாா். அப்போது கொலையுண்டவரின் மனைவிக்கு அரசு வேலையும், உரிய நிவாரணமும் வழங்க வலியுறுத்தினா். இதுகுறித்து முதல்வருக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா். அதையேற்று, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கண்ணனின் உடலை உறவினா்கள் வியாழக்கிழமை பெற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.