முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளம் பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளம் பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முன்னீா்பள்ளம் புதுகிராமம் பகுதியைச் சோ்ந்த சங்கரன் மகன் முருகன் (24), தென்திருபுவனம் பகுதியைச் சோ்ந்த காளி என்ற கருப்பசாமி மகன் பேச்சுத்துரை(22), தருவை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் முத்து (20), கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த அல்லல்காத்தான் மகன் அருணாச்சலம் (21), முருகன் மகன் இசக்கிபாண்டி (20), மாரிமுத்து மகன் சங்கரலிங்கம் என்ற சங்கா் (22) ஆகியோா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு

சிறையில் உள்ளனா்.

இவா்கள் மீது குண்டா் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரை செய்தாா். இதைடுத்து, மேற்கண்ட 6 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் வே.விஷ்ணு

உத்தரவிட்டாா். அதன்படி, 6 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.