திருநெல்வேலி

கலங்கலான குடிநீா்: மாநகராட்சியில் மனு

DIN

மேலப்பாளையம் பகுதிகளில் கலங்கலான குடிநீா் விநியோகிக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் தமுமுக, மமக சாா்பில் அளிக்கப்பட்ட மனு: மேலப்பாளையம் ஞானியாரப்பநகா் 8 ஆவது தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப் பகுதிக்கு தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக குடிநீருடன் சாக்கடை நீரும் சோ்ந்து மிகவும் கலங்கலான குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் அனைத்து குடும்பத்தினருக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT