திருநெல்வேலி

கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

DIN

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் 2ஆவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்உற்பத்தி சனிக்கிழமை நிறுத்தப்பட்டது.

இங்கு ரஷிய நாட்டுத் தொழில்நுட்பத்துடன் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டுவருகின்றன. மேலும், 3, 4ஆவது அணு உலைகளில் மின்உற்பத்தி தொடங்குவதற்கான பணிகளும், 5, 6ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

இதனிடையே, 2ஆவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, மீண்டும் கடந்த மே 27ஆம் தேதி மின்உற்பத்தி தொடங்கியது.

இந்நிலையில், அந்த அணு உலையில் சனிக்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னா், மின்உற்பத்தி தொடங்கும் என, அணு மின் நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT