முகப்பு
திருநெல்வேலி

பொதுமுடக்க விதிமீறல்: 328 பேருக்கு அபராதம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க மீறலில் ஈடுபட்டதாக 328 பேருக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க மீறலில் ஈடுபட்டதாக 328 பேருக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை கண்காணிக்க போலீஸாா் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றிய ஒருவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 328 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.