இந்து முன்னணியினா் போராட்டம்
திருநெல்வேலியில் இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலியில் இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா இரண்டாவது அலையின் காரணமாக தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் பொது தரிசனத்திற்கு அனுமதி வழங்கக் கோரி இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் முன்பு இந்து முன்னணியினா் கற்பூரம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்து முன்னணி மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன் தலைமை வகித்தாா். பாஜக வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலா் பாலாஜி கிருஷ்ணசுவாமி, ஏபிவிபி தேசிய செயலா் முத்துராமலிங்கம் உள்பட பலா்கலந்துகொண்டனா்.
இதேபோல தச்சநல்லூா், பாளையங்கோட்டை, பேட்டை, மேலப்பாளையம் உள்பட மொத்தம் 25 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.