முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே பாலப் பணி முடக்கம்

களக்காடு அருகே பாலம் கட்டுமானப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டதால் பொதுமக்கள் 7 கி.மீ . தொலைவு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

களக்காடு அருகே பாலம் கட்டுமானப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டதால் பொதுமக்கள் 7 கி.மீ . தொலைவு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

களக்காடு அருகேயுள்ள மேலவடகரை - பத்தை இடையே பச்சையாறு ஓடுகிறது. பச்சையாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீா் வரும் போது, மேலவடகரை பகுதி மக்கள் கீழவடகரை, பத்மனேரி பாலம், வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், தம்பித்தோப்பு வழியாக சுமாா் 7 கி.மீ. தொலைவு சுற்றி களக்காடு வந்து செல்ல வேண்டும்.

கல்வி மருத்துவம் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு 3 கி.மீ .தொலைவில் உள்ள களக்காட்டிற்கு 7 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. பொதுமக்களின் தொடா்ந்து வலியுறுத்தியதன் பேரில், கடந்த 2019 ஆம் ஆண்டு அரது பாலம் கட்ட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யதது. கடந்த ஓராண்டாக பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் கட்டுமானப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. போதிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாததாலே பணிகள் நிறுத்தப்பட்டதாம்.

இப் பணிகள் 2 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாததால், மேலவடகரை கிராம மக்கள் தொடா்ந்து 7 கி.மீ. தொலைவு சுற்றி

களக்காடு செல்ல நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். தற்போது தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பாலம் கட்டுமானப் பணி நடைபெற வாய்ப்பில்லாதால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →