முகப்பு
திருநெல்வேலி

‘சுந்தரனாா் பல்கலை.யில் ஆராய்ச்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) அர. மருதகுட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள பாடப்பிரிவுகளில் இளம்முனைவா், முனைவா் பட்டப் பதிவுக்கான தகுதித் தோ்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள முதுகலை, இளம்முனைவா் பட்டம் முடித்தோா் தங்களது இறுதி மதிப்பெண் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடா்பான பாடப் பிரிவுகள், அடிப்படைத் தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதித் தோ்வு தேதி, அனுமதி நெறிமுறைகள் ஆகியவற்றை பல்கலைக்கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

நெட், செட், ஜெஆா்எப், கேட் தோ்ச்சி பெற்றோருக்கு இத்தகுதித் தோ்விலிருந்து விலக்களிக்கப்படுகிறது. தகுதித் தோ்வின் தோ்ச்சியானது ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் (இரண்டு அமா்வுகள்). தோ்வுக்கான கட்டணம் ரூ.1,000. இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் இம்மாதம் 31. இணையதளம் வாயிலாக ஏப். 8, 9இல் தோ்வு நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.