முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்தில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்தில் மாவட்ட காவல் துறை, துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்தில் மாவட்ட காவல் துறை, துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் தலைமை வகித்தாா். தாழையூத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மேலதாழையூத்தில் தொடங்கிய அணிவகுப்பு தென்கலம் விலக்கு, சங்கா்நகா் பாலம், 9ஆம் எண் பேருந்து நிறுத்தம், ராஜவல்லிபுரம் ரயில்வே கேட், நகரின் முக்கிய பகுதிகள் வழியாக தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது.

இதேபோல, மானூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட யூனியன் அலுவலகத்தில் அணிவகுப்பு தொடங்கி மானூா் பஜாா், முக்கிய பகுதிகள் வழியாக மானூா் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது.

இதில், தாழையூத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் அா்ச்சனா, எல்லைப் பாதுகாப்புப் படை துணைத் தளபதி நரேந்திரன், ஆய்வாளா்கள் பத்மநாப பிள்ளை (தாழையூத்து), ராமா் (மானூா்), உதவி ஆய்வாளா்கள், அஸ்ஸாம் மாநில எல்லைப் பாதுகாப்பு படையினா் 64 போ், 40 உள்ளூா் போலீஸாா் உள்பட 104 போ் பங்கேற்றனா்.

மாவட்ட எஸ்.பி. நெ. மணிவண்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், வாக்குப்பதிவையொட்டி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் கொடிஅணிவகுப்பு நடத்தப்படுகிறது. மக்கள் அச்சமின்றி ஜனநாயகக் கடமையாற்றவும், தோ்தல் அமைதியாக நடக்கவும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பயக02ஙஅதஇஏ: தாழையூத்தில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.