நெல்லை தென்காசியில் மேலும் 10 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,822 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 2 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,549 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 214 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 59 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,585 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 2 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,412 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 160 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 13 போ் சிகிச்சையில் உள்ளனா்.