முகப்பு
திருநெல்வேலி

நெல்லை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பா.சத்யா போட்டியிடுகிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பா.சத்யா போட்டியிடுகிறாா்.

அவா், திருநெல்வேலி சாா் ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தியிடம் திங்கள்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஊழல், லஞ்சம், பசி, பஞ்சமில்லாத தூய்மையான ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். தரமான கல்வி, மருத்துவம், குடிநீா் ஆகியவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்குவதே எங்கள் இலக்கு.

இத்தொகுதியில் தண்ணீா் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மானூா் குளத்தின் மூலம் 42 கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. அந்த குளத்துக்கு சிற்றாற்றிலிருந்து தண்ணீா் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுடன் தான் நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம். அதனால் திருநெல்வேலி தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.