ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் திருட்டு
பாளையங்கோட்டை ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் பணம், தங்க மோதிரம் ஆகியவற்றை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் பணம், தங்க மோதிரம் ஆகியவற்றை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை, சமாதானபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன்கோயில் பிள்ளை(53). ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னா் வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினா் வீட்டுக்குச் சென்றாராம். பின்னா், திரும்பி வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், வீட்டில் இருந்த ரூ.46ஆயிரம், 1 பவுன் மோதிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.