ஆட்சியா் அலுவலகத்தில் நாரணம்மாள்புரம் பேரூராட்சி மக்கள் முற்றுகை
நாரணம்மாள்புரம் பேரூராட்சி மக்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.
நாரணம்மாள்புரம் பேரூராட்சி மக்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.
நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குள்பட்ட அருணாசலநகா் பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டு அளித்த மனு:
எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கழிவுநீா் ஓடை வசதி இல்லாததால் தெருக்களில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் பலனில்லை. ஆகவே, அருணாசலநகரில் வாருகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.