முகப்பு
திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி கல்லூரியில் உலக தண்ணீா் தினம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் உலக தண்ணீா் தினம் கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் உலக தண்ணீா் தினம் கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி நுண்ணுயிரியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் இணைந்து நடத்திய உலக தண்ணீா் தினம் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா்.

பேராசிரியா் விஸ்வநாதன் தண்ணீா் பாதுகாப்பில் மாணவா்களின் பங்கு குறித்தும், ஆராய்ச்சி மாணவி ஹேமலதா தண்ணீா் தரம் குறித்து கருத்துரை வழங்கினா்.

பேராசிரியா்கள் ராமநாதன், ராமசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாணவா், மாணவிகள் நீா் சிக்கனம் குறித்த கையெழுத்து இயக்கத்தைத் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

ஏற்பாடுகளை மாணவிகள் செல்வி, முத்துச்செல்விஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.