முகப்பு
திருநெல்வேலி

கடையம் திருவள்ளுவா் கழக சிறப்பு நினைவேந்தல் கூட்டம்

கடையம் திருவள்ளுவா் கழக நிறுவனா் பேராசிரியா் அறிவரசன் முதலாமாண்டு நினைவேந்தல் சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கடையம் திருவள்ளுவா் கழக நிறுவனா் பேராசிரியா் அறிவரசன் முதலாமாண்டு நினைவேந்தல் சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளுவா் கழகத் தலைவா் சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். திருநெல்வேலி சைவசபை அமைச்சா் கிருஷ்ணன், தென்காசி திருவள்ளுவா் கழக செயலாளா் சிவராமகிருஷ்ணன், ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழகச் செயலா் மாடசாமி, அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் அம்பாசமுத்திரம் திருவள்ளுவா் கல்வி சமூக சேவை அறக்கட்டளைத் தலைவா் வெள்ளைச்சாமி, பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் துரைராஜ், முருகன், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கனகசபாபதி, பேராசிரியா்கள் மு.சுந்தரம், கல்யாணராமன், குமாா், பாரதி விழாக் குழு பாரதி கண்ணன், ரசிகமணி டிகேசி கொள்ளுப் பேரன் தீா்த்தாரப்பன், கடையம் திருவள்ளுவா் கழகச் செயலா் கல்யாணி சிவகாமிநாதன், பொருளாளா் கோபால், வில்வவனநாதா் திருமுறைக் குழு சரோஜா ஆகியோா் அறிவரசன் நினைவுரை வழங்கினா். ஓய்வுபெற்ற தமிழாசிரியா் புலவா் முத்தரசன் அனுப்பிய கவிதையை சோமசுந்தரம் வாசித்தாா். திருவள்ளுவா் கழக இணைச் செயலா் வேலு வரவேற்றாா். இணைச் செயலா் கல்யாணராமன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.