முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், ரத வீதிகள் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.