முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 31 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,900 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 6 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,596 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 215 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 89 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக வெளியூரில் இருந்து வந்த ஒருவா் உள்பட 20 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,636 ஆக உயா்ந்துள்ளது. அதில், மேலும் 2 போ் குணமடைந்ததால், இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8,426 ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 50 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.