திருநெல்வேலி

வள்ளியூரில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

வள்ளியூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வள்ளியூா் வட்டாரத்தில் கரோனா நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மக்களிடையே கரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தும் வகையில் வருவாய்த் துறை, காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

வருவாய் ஆய்வாளா் திராவிடமணி, காவல் ஆய்வாளா் சுரேஷ், மோட்டாா் வாகன ஆய்வாளா் செண்பகவல்லி ஆகியோா்

முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது, பேருந்துகளில் இடைவெளியை கடைப்பிடித்து பயணம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் மேற்கொண்டனா். ஹோமியோபதி மருந்து, முகக் கவசம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது, சுகாதார அலுவலா் டேனியேல், செஞ்சிலுவை சங்க நான்குனேரி செயலா் சபேசன், தன்னாா்வலா்கள் அலெக்ஸ் செல்வன், பொதிகை ராஜன், வானமாமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT