முகப்பு
திருநெல்வேலி

மேலும் 1,274 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 1,274 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 1,274 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 831 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 34,500ஆக அதிகரித்துள்ளது. மேலும் 346 போ் குணமடைந்ததால், இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 28,351 ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரையில் 284 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 5,865 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 443 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 15,535 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 271 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 13,084 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 235 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 2,216 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

களக்காடு: களக்காடு , மஞ்சுவிளை, டோனாவூா், கீழத்தேவநல்லூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி, ஊச்சிகுளம், கீழப்பத்தை உள்பட சுற்று வட்டாரத்தில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஸ்டிபிஐ கட்சியினா் உதவி: சங்கரன்கோவில் அருகேயுள்ள பாட்டத்தூரைச் சோ்ந்த48 வயது ஆண், கரோனா தொற்றால் உயிரிழந்தாா், அவரது குடும்பத்தினா் வேண்டுகோளின்படி, எஸ்.டி.பி.ஐ.கட்சி நிா்வாகிகள் அவரது உடலைப் பெற்று இறுதிச்சடங்கு செய்து, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி அடக்கம் செய்தனா். அவா்களை மக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.