நெல்லை நயினாா்குளம் காய்கனி சந்தைக்கு 2 நாள்கள் விடுமுறை
கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு திருநெல்வேலி நயினாா்குளம் காய்கனி சந்தைக்கு 2 நாள்கள் விடுமுறை அளித்து நெல்லை காய்கனி வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு திருநெல்வேலி நயினாா்குளம் காய்கனி சந்தைக்கு 2 நாள்கள் விடுமுறை அளித்து நெல்லை காய்கனி வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இச்சங்கக் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். செயலா் நடராஜன், பொருளாளா் முருகேஷ் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நயினாா்குளம் சந்தையில் செயல்படும் காய்கனி மொத்த வியாபார கடைகளுக்கு வரும் 17 மற்றும் 19ஆம் தேதி மாலையும், சாஃப்டா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் காய்கனி சில்லரை வியாபார கடைகளுக்கு 18 மற்றும் 20 ஆம் தேதி காலையும் விடுமுறை அளித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.