ஊத்துமலை கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி எம்எல்ஏவிடம் மனு
ஊத்துமலை கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
ஊத்துமலை கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
காமராஜா் ஆட்சி காலத்தில் இரட்டைகுளம் கால்வாயில் இருந்து வழியோர கிராம குளங்களின் வழியாக ஊத்துமலை பெரியகுளத்திற்கு நீா் கொண்டு செல்லும் ஊத்துமலை கால்வாய் திட்டம் தயாரிக்கப்பட்டது.
நீண்ட காலமாக கிடப்பில் உள்ள இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் தொடா் கோரிக்கை விடுத்துவந்தனா். இதையடுத்து கடந்த ஆட்சியில் இத்திட்டத்திற்கு முன்வரைவு தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த முன்வரைவில், ஊத்துமலை பெரியகுளத்திற்கு முன்பாக உள்ள கீழக்கலங்கல் குளத்தோடு திட்டம் முடிவதாக தெரிவிக்கப்பட்டதாம்.
இந்நிலையில், தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாரை நேரில் சந்தித்த விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் மாடசாமி தலைமையிலான விவசாயிகள், இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்தை ஊத்துமலை பெரியகுளம் வரை நீடிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா். அவா், உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்தாா்.