திருநெல்வேலி

பொது முடக்க விதிமீறல்: 42 வாகனங்கள் பறிமுதல்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 39 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 42 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் தளா்வற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவுப்படி பொது முடக்க விதிகளை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, வெள்ளிக்கிழமை பொது முடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, 42 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 272 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 9 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT