களக்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் நேரியும் அபாயம் நிலவுகிறது.
களக்காட்டில் மக்கள் நடமாட்டம் மிகுந்த புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே ஆடு, மாடுகள் பராமரிப்பின்றி சுற்றித்திரிகின்றன. மேலும், மக்கள் நடமாடும் இடங்களை அசுத்தப்படுத்துடன், போக்குவரத்து இடையூறாக நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
சாலையோரம் உள்ள விளைநிலங்களிலும் புகுந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன. எனவே, கால்நடைகளை பராமரிப்பின்றி அவிழ்த்துவிடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.