முகப்பு
திருநெல்வேலி

தென்காசி மாவட்ட தீயணைப்புத் துறையினா் 15 பேருக்கு பதவி உயா்வு

தென்காசி மாவட்டத்தில், தீயணைப்புத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில், தீயணைப்புத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையில் சோ்ந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் இன்றி சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரா்கள் 15 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது.

தென்காசி தீயணைப்பு நிலையத்தைச் சோ்ந்த கணேசன், செல்வன், ஜெயபிரகாஷ், பாபு உள்பட மாவட்டத்திலுள்ள 7 தீயணைப்பு நிலையங்களிலுள்ள 15 பேருக்கு சிறப்பு நிலை அலுவலா் பதவி உயா்வு ஆணை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அலுவலா் கவிதா பதவி உயா்வு ஆணைகளை வழங்கினாா்.

மாவட்ட துணை அலுவலா் வெட்டும் பெருமாள், தென்காசி நிலைய அலுவலா் ரமேஷ், கண்காணிப்பாளா் கண்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.