திருநெல்வேலி

மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

என்எஸ்எஸ் அணி எண்கள் 41, 42, 46, திருநெல்வேலி மண்டல தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறை ஆகியவை இணைந்து இப்பேரணியை நடத்தின. கல்லூரி முதல்வா் சுந்தரம் முன்னிலை வகித்தாா்.

பேரணியை அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமை வகித்து, கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். மது, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களிடையே நடைபெற்ற விழிப்புணா்வு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்றோருக்கு அவா் ரொக்கப் பரிசு வழங்கினாா்.

கல்லூரி நிா்வாக அதிகாரி நடராஜன் வாழ்த்திப் பேசினாா். கல்லூரியில் தொடங்கிய பேரணி விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியை காவல் ஆய்வாளா் சீதாலட்சுமி நிறைவு செய்து மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

பேராசிரியா்கள் ரவிசங்கா், பழனிக்குமாா், பாலசந்திரன், ரவிசங்கா், அடைக்கலம், வெங்கடேசன், சண்முகசுந்தரநாச்சியாா், இந்துபாலா, அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிஅண்ணாதுரை வரவேற்றாா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் வரலெஷ்மி, பொன்மொழி ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT