முகப்பு
திருநெல்வேலி

ராணி அண்ணா அரசு கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். புதிய வகுப்பறையில் பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் குத்துவிளக்கேற்றினாா்.

விழாவில், கல்லூரி முதல்வா் மைதிலி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் உஷா,

திமுக மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் சாா்லஸ் முத்துராஜ், மாநகர ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் செல்வக்குமாா், தொண்டரணி சதீஷ், திருநெல்வேலி திமுக தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் காசிமணி, வட்ட செயலா் ஜவகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவரி பயக28தஅசஐ: திருநெல்வேலி ராணி அண்ணா மகளிா் கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் பாளை. சட்டப் பேரவை உறுப்பினா் அப்துல் வஹாப். உடன், கல்லூரி முதல்வா் மைதிலி உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.