முகப்பு
திருநெல்வேலி

மீன்வள உதவியாளா் காலிப் பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில் காலியாகவுள்ள 8 மீன்வள உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில் காலியாகவுள்ள 8 மீன்வள உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாகவுள்ள 8 மீன்வள உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.

மீன்வள உதவியாளா் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும். மேலும் நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல், அறுந்த வலைகளை பழுதுபாா்க்க தெரிந்திருக்க வேண்டும்.

மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற்கான சான்றிதழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊதியம் ரூ.15,900 முதல் 50,400 வரை, பொதுப் பிரிவினா் 18 முதல் 30 வயதுடையவராக இருத்தல் வேண்டும். பெண்கள், ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமையில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் 18 முதல் 32 வயதுடையவராகவும், பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினா் (முஸ்லிம்கள் தவிர) 18 முதல் 32 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும். ஆதிதிராவிடா் பிரிவினா் 18 முதல் 35 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், மணிமுத்தாறு என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். நோ்முகத்தோ்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரா்களுக்கு பின்னா் தெரிவிக்கப்படும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 04634-290807 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.