ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிசெய்யும் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஆசிரியா்களை இழிவுபடுத்திய தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களின் மாண்பை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனா்.
அதன்படி திருநெல்வேலி அருகே நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா்களுக்கான கணினி பயிற்சி வகுப்பில் பங்கேற்க வந்த ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனா். இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு ஆசிரியா்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனா்.