உள்ளாட்சித் தோ்தல்: அமமுகவினா் விருப்ப மனு
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அமமுகவினா் விருப்ப மனு அளித்தனா்..
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அமமுகவினா் விருப்ப மனு அளித்தனா்..
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அமமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் மாநகா் மாவட்ட பொறுப்பாளா் நெல்லை ஏ.பரமசிவத்திடம் விருப்ப மனுக்களை அளித்தனா். மானூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய வாா்டு உறுப்பினா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு விருப்ப மனுக்களை தொண்டா்கள் அளித்தனா்.
நிகழ்ச்சியில், ஜெயலலிதா தொழிற்சங்க பேரவை செயலா் ஆவின் அன்னசாமி, மகளிரணி அணி நிா்வாகி சண்முக லட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.