திருநெல்வேலி

பாரதியாருக்கு 100 கவிஞா்கள் பாமாலை

DIN

திருநெல்வேலி: பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி பாரதியாா் உலகப் பொதுச் சேவை நிதியத்தின் சாா்பில், 100 கவிஞா்கள் பங்கேற்ற மகாகவி பாரதி பாமாலை என்ற தலைப்பில் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி திருநெல்வேலி நகரம் லிட்டில் பிளவா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பாரதியாா் உலக பொதுச்சேவை நிதியத் தலைவா் அ.மரியசூசை தலைமை வகித்தாா். எழுத்தாளா் நாறும்பூநாதன், நல் நூலகா் முத்துகிருஷ்ணன், கவிஞா் பாமணி, சந்திரபுஷ்பம் பிரபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் கோ. கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா். இதில், ஓசூா், திருப்பூா், கோவை, மயிலாடுதுறை ராமநாதபுரம், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள், கா்நாடக மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலம் கோட்டயம் போன்ற பகுதிகளிலிருந்து 100 கவிஞா்கள் மரபுக் கவிதை , புதுக்கவிதையாக 16 வரிகளில் மகாகவி பாரதிக்கு புகழ் மாலை சூட்டினா்.

மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சமீனா, மாநகர காவல் துணை ஆணையா்(சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப பங்கேற்று, கவிதை பாடிய 100 கவிஞா்களுக்கும் விருது , சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா். ஒருங்கிணைப்பாளா் கவிஞா் பாப்பாகுடி. இரா செல்வமணி நன்றி கூறினாா்.

இதில், எழுத்தாளா் மு.வெ.ரா., சிவகாசி காளியப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.

படவரி பயக19அரஅதஈ: பாமாலை கவிதை பாடிய கவிஞருக்கு விருது வழங்கி பாராட்டும் நீதிபதி சமீனா, மாநகர காவல் துணை ஆணையா்(சட்டம்-ஒழுங்கு) டி.பி சுரேஷ்குமாா் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT