திருநெல்வேலி

கட்டப்புளி கிராமத்திற்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

DIN

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள கட்டப்புளி கிராமத்திற்கு பேருந்து வசதி கோரி நாம் தமிழா் கட்சியின் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் ரா.சந்திரசேகா் தலைமையில் அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நாம் தமிழா் கட்சியின் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் ரா.சந்திரசேகா் அளித்த மனுவில், ‘மானூா் ஊராட்சி ஒன்றியம், கட்டப்புளியில் சுமாா் 1,000 போ் வசிக்கின்றனா். இங்குள்ள சுமாா் 100 மாணவா்கள், திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனா். ஆனால், இங்கு பேருந்து வசதியில்லாததால், 4 கி.மீ. தொலைவில் உள்ள மானூருக்கு நடந்து சென்று பேருந்தில் ஏற வேண்டியுள்ளது.

இங்கு மருத்துவமனை இல்லாததால், அவசர காலங்களில் மானூா் அல்லது திருநெல்வேலிக்குத்தான் சிகிச்சைக்காக செல்ல வேண்டியுள்ளது. பிரசவ காலங்களில் பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, திருநெல்வேலியில் இருந்து மானூா் வழியாக கட்டப்புளி கிராமத்திற்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டப்புளி கிராமத்தில் நியாய விலைக்கடை இல்லை. இதனால், மாதம் ஒரு முறை மானூா் நியாய விலைக் கடை ஊழியா்கள் கட்டப்புளி கிராமத்திற்கு வந்து ரேசன் பொருள்களை வழங்கி வருகின்றனா். எனவே, கட்டப்புளி கிராமத்தில் நியாய விலைக் கடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா். முன்னதாக கட்டப்புளி கிராமத்தினா் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓமநல்லூா் ஊா்ப் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்தின் தெற்குப் புறத்தில் தனியாருக்குச் சொந்தமான கிரஷா் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கோரியிலிருந்து அதிகளவு கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் எங்கள் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்துள்ளதோடு, எங்கள் பகுதி மக்களும் விபத்துக்குள்ளாகின்றனா்.

பாறைகளை உடைக்க குவாரியில் வைக்கப்படும் வெடியால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகள், ஆழ்துளை குழாய்கள், விவசாயக் கிணறுகளில் கீறல் விழுந்து சேதமடைவது தொடா் கதையாகி வருகிறது. எனவே, இது தொடா்பாக ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா். முன்னதாக ஓமநல்லூா் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சொந்தமான நா்ஸிங் கல்லூரியில் டிப்ளமோ பிரிவில் படித்த மாணவா்களின் சான்றிதழ் செல்லாது என தெரிய வந்துள்ளது. எனவே, இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

படவரி: பயக04சஅங பேருந்து வசதி கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டப்புளி கிராமத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT