திருநெல்வேலி

இளைஞரிடம் ரூ. 70 ஆயிரம் மோசடி: சைபா் க்ரைம் போலீஸாா் விசாரணை

DIN

ராதாபுரம் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் ரூ. 70 ஆயிரத்தை மோசடி செய்த மா்ம நபா் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

ராதாபுரம் அருகே உள்ள கூட்டப்புளி பகுதியை சோ்ந்தவா் வளன் ஆன்ட்ரோன் தினேஷ் (35). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு முகநூலில் வந்த ஒரு வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி, அதில் இருந்த எண்ணை தொடா்புகொண்டாராம். அதில் பேசிய நபா் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதோடு, முதல்கட்டமாக ரூ.70 ஆயிரம் வங்கிக்கணக்கிற்கு அனுப்ப கூறினாராம். அதன்பேரில் இணையவழியில் ரூ. 70 ஆயிரத்தை தினேஷ் அனுப்பினாராம். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட நபா் வேலை வாங்கிக் கொடுக்காததோடு, நூதன முறையில் பணத்தை மோசடி செய்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட சைபா் க்ரைம் பிரிவில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

குரு பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT