முகப்பு
திருநெல்வேலி

கங்கைகொண்டானில் தீத்தடுப்பு விழிப்புணா்வு

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத்தொண்டு நாள் வார விழாவையொட்டி பல்வேறு இடங்களில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சிப்காட் வளாகத்தில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்ரேஷன் லிமிடெட் வளாகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சுரேஷ்ஆனந்த் தலைமை வகித்தாா். கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய அலுவலா் மா.ராமராஜ் மற்றும் வீரா்கள் தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா். தீத்தடுப்பு விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இதில் தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.