முகப்பு
திருநெல்வேலி

தேவா்குளம் அருகே பைக் மோதி விவசாயி பலி

 திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

 திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தாா்.

தேவா்குளம் அருகே உள்ள வடதலைவன்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி மருதையா(65). இவா் கடந்த இரு தினங்களுக்கு முன்னா் அப்பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது அந்த வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதி விபத்துக்குள்ளானதாம். இதில் பலத்த காயமடைந்த மருதையாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.