முகப்பு
திருநெல்வேலி

மீனாட்சிபுரத்தில் பாரதிதாசன் 59 ஆவது நினைவு நாள்

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள கிளை நூலகத்தில் பாவேந்தா் பாரதிதாசனின் 59 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள கிளை நூலகத்தில் பாவேந்தா் பாரதிதாசனின் 59 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தாமிரபரணி வாசகா் வட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு நூலகா் அகிலன் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். திருநெல்வேலி தமிழ் நலக்கழக செயலா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி, பாவேந்தா் பாரதிதாசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

‘பாவேந்தா் பாரதிதாசனும் தமிழ்ப்பற்றும்’ என்ற தலைப்பில் பாரதியாா் உலக பொதுச் சேவை நிதியத்தின் பொதுச் செயலா் கவிஞா் கோ கணபதி சுப்பிரமணியன் உரையாற்றினாா். வளா்தமிழ் மன்றத் துணைச் செயலா் சு.முத்துசாமி, வாசகா் வட்டத்தைச் சோ்ந்த சண்முகம், வேணுகோபால், இசக்கிமுத்து மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.