திமுக அமைப்பு தோ்தல்: மாவட்டச் செயலா் அறிக்கை
திருநெல்வேலி மாநகா், சங்கா்நகா், நாராணம்மாள்பும் பேரூராட்சி பகுதிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவினா் அமைப்பு தோ்தலில் போட்டியிட மனுஅளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகா், சங்கா்நகா், நாராணம்மாள்பும் பேரூராட்சி பகுதிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவினா் அமைப்பு தோ்தலில் போட்டியிட மனுஅளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவின் 15 ஆவது அமைப்பு தோ்தலில் திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்குள்பட்ட திருநெல்வேலி மாநகா் - சங்கா் நகா் பேரூா் - நாரணம்மாள்புரம் பேரூா் ஆகியவற்றின் வட்டக் கழகத் தோ்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு பெறப்பட உள்ளது. அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஏப். 23, 24) காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் திருநெல்வேலி, வண்ணாா்பேட்டையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் வேட்பு மனு படிவங்களை பெற்று, பூா்த்தி செய்து தலைமைக் கழகம் அறிவித்துள்ள பிரதிநிதிகளிடம் உரிய கட்டணத்துடன் செலுத்திட கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.