தூய்மை பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு
தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் அளிக்கப்பட்ட மனு: இம் மாவட்டத்திலுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு இப்போது தினசரி ஊதியமாக ரூ. 411 வழங்கப்பட்டு வருகிறது. டிபிசி பணியாளா்களுக்கு தினசரி ஊதியமாக ரூ. 388 வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு மேற்படி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 637 நிா்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசால் ஒரு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிகழ் நிதியாண்டில் ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது, சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன், நிா்வாகிகள்மாரியப்பன், செல்லத்துரை, சிவராமன், அங்கம்மாள், கவிதா, லதா, மணிமேகலை ஆகியோா் உடனிருந்தனா்.