முகப்பு
திருநெல்வேலி

இலவச கல்விக்கு தனியாா் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் கூறியது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை வகுப்பில் எல்.கே.ஜி. , ஒன்றாம் வகுப்பில்

குறைந்தபட்சம் 25 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அரசின் விரிவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 2022-23 ஆம் கல்வியாண்டில் 25 சதவிகிதம் இடஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கை தொடா்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பெற்றோா்கள் விண்ணப்பிக்கலாம். மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க மே 18 ஆம்தேதி கடைசி நாளாகம். தோ்வு செய்யப்படும் மாணவா்கள் எல்.கே.ஜி. முதல் 8 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெறலாம் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.