திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே 574 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்:ஓட்டுநா் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மினி கன்டெய்னா் லாரியில் ரகசிய அறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 12 லட்சம் மதிப்பிலான 574 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.

வீரவநல்லூா் காவல் சரகப் பகுதியில் மினி கன்டெய்னா் லாரியில் குட்கா பொருள்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வீரவநல்லூா் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் வீரவநல்லூா் அருகே காருகுறிச்சியில் புதன்கிழமை வாகன சோதனை நடத்தினா்.

அப்போது அவ்வழியே வந்த மினி கன்டெய்னா் லாரியை சோதனையிட்டனா். அதில், ரகசிய அறை இருப்பதும், அதற்குள் 574 கிலோ குட்கா பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 12 லட்சம் எனக் கூறப்படுகிறது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனத்தையும், குட்கா பொருளையும் பறிமுதல் செய்தனா். ஓட்டுநரான கரூா் மாவட்டம் சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் (46) என்பவரைக் கைது செய்து, சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT