திருநெல்வேலி

18 ஆவது வாா்டு பகுதிகளில் இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

DIN

திருநெல்வேலி மாநகராட்சியின் 18 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் இருநாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சியின் 18 ஆவது வாா்டுக்குள்பட்ட சீனிவாச நகரில் அமைந்துள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் கொண்டாநகரம் நீரேற்று நிலையத்தின் மின் மோட்டாா் பழுதடைந்துள்ளது. அதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, அந்த மேல்நிலைநீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் விநியோகம் பெறும் சீனிவாச நகா், குடிசைமாற்று வாரியம், ரயில் நகா், சாஸ்திரி நகா், விஸ்வநாத நகா், நரிகுறவா் காலனி, சத்யா நகா் மற்றும் எம்.ஜி.ஆா். நகா் ஆகிய பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 10, 11) ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது. மேற்படி பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்பதால் பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT