முகப்பு
திருநெல்வேலி

வேட்புமனு தாக்கல்: இன்று கடைசி நாள்

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையோடு (பிப்.4) முடிவடைகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையோடு (பிப்.4) முடிவடைகிறது.

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளைச் சோ்ந்த 397 வாா்டுகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.28) தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் இரு நாள்களில் பெரிய அளவில் மனுத்தாக்கல் செய்யப்படாத நிலையில், கடந்த திங்கள்கிழமையில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளும் ஆா்வம் காட்டினா். வியாழக்கிழமை திருநெல்வேலி மாநகராட்சி தோ்தலில் போட்டியிட மட்டும் 153 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். எனவே, கடைசி நாளான வெள்ளிக்கிழமை ஏராளமானோா் வேட்புமனு தாக்கல் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.