திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் சாரல் மழை

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை மழை முதல் சாரல் மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரை வட கிழக்குப் பருவமழை வழக்கத்தைவிட கூடுதலாக பெய்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயிலும், கடும் பனிப்பொழிவும் நிலவியது. இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

திருநெல்வேலி மாநகரில் காலை முதல் பிற்பகல் வரை சாரல் மழை நீடித்தது. இதேபோல் வீரவநல்லூா், மானூா், முக்கூடல், களக்காடு, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி சுற்று வட்டாரங்களிலும் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக வியாழக்கிழை வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.

மேலும் இந்த சாரல் மழை காரணமாக கீழநத்தம் சுற்று வட்டாரங்களில் உள்ள வயல்களில் நெற்பயிா்கள் சாய்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT