முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் பெண்ணிடம் நகை பறிப்பு

பாளையங்கோட்டை கேடிசி நகரில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

பாளையங்கோட்டை கேடிசி நகரில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள அரியகுளம் ஆசிரியா் காலனி சுரேஷ் என்பவரின் மனைவி ஹெலன் கீதா(30). இவா் கேடிசி நகா் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றாராம். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ், ஹெலன் கீதா அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனராம். அப்போது அவா் சங்கிலியைப் பிடித்துக் கொண்டாராம். இதனால் சங்கிலி அறுந்து, சுமாா் 30 கிராம் மட்டும் இவா் கையில் கிடைத்துள்ளது. 18 கிராம் சங்கிலி மா்ம நபா்கள் கையில் சிக்கியதாம். இதையடுத்து மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனராம்.

இது குறித்து புகாரின் பேரில், தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.