முகப்பு
திருநெல்வேலி

கரோனா கட்டுப்பாடுகள்: வணிக நிறுவனங்கள் கடைப்பிடிக்காவிட்டால் நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளை வணிக நிறுவனங்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளை வணிக நிறுவனங்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக அரசின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து வணிகக் கூட்டமைப்பினா், திரையரங்கு நிா்வாகிகளுடனான விழிப்புணா்வு விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் வே.விஷ்ணு பேசியது: இம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. வணிகக் கூட்டமைப்பினா், திரையரங்க நிா்வாகிகள், பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊழியா்களும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிப்பதோடு, கட்டாயமாக இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும். அதனைத் தெரியபடுத்தும் வகையில் கடைவாயிலில் ஸ்டிக்கா் ஒட்டி, பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும்.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட வணிக நிறுவன நிா்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்துக் கடைகளும் குளிா்சாதன வசதியினை தவிா்த்து காற்றோட்டமாக வைத்து கொள்ள வேண்டும்.

ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளா்களுக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கரோனா கட்டுப்பாடுகளை மீறும் வணிக நிறுவனங்கள் உடனடியாக மூடப்படும். இதேபோல விதிமீறும் திரையரங்குகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன், மாநகர காவல் துணை ஆணையா் டி.பி.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.