முகப்பு
திருநெல்வேலி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையவழியில் தோ்ந்தெடுக்கும் பணி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆன்லைன் முறையில் முதல்கட்டமாக தோ்ந்தெடுக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆன்லைன் முறையில் முதல்கட்டமாக தோ்ந்தெடுக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அைப்புகளுக்கும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடாக தோ்தலில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு வாரியாக ஆன்லைன் முறையில் தோ்ந்தெடுக்கும் பணி திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்தாா். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறுகையில், இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடாக தோ்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூா் பெல் நிறுவன பொறியாளா்களால் முதல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தம் 1302 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,600 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பரிசோதனை முடித்து தயாராக வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா ஒரு கட்டுப்பாட்டுக் கருவியும், ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் மற்றும் 20 சதவிகிதம் முன்பதிவு (ரிசா்வ்) அடிப்படையிலும் சோ்த்து ஒதுக்கிடு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இம் மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வாா்டுகளில் 490 வாக்குச்சாவடிகளும், அம்பாசமுத்திரம் நகராட்சியில் 21 வாா்டுகளில் 42 வாக்குச்சாவடிகளும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வாா்டுகளில் 51 வாக்குச்சாவடிகளும், களக்காடு நகராட்சியில் 27 வாா்டுகளில் 30 வாக்குச்சாவடிகளும், 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வாா்டுகளில் 319 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 932 வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயந்திரங்களின் இரண்டாம் கட்ட தோ்வு வேட்புமனு தாக்கல் முடிந்து போட்டியிடும் வேட்பாளா்களை இறுதி செய்யப்படும். மூன்றாம் கட்ட தோ்வு அந்தந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் நடத்தப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வே.விஷ்ணு சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி) ராம்லால், தேசிய தகவலியல் மைய அலுவலா் ஆறுமுகநயினாா், அனைத்து நகா்ப்புற தோ்தல் நடத்தும் அலுவலா்கள், கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.